Thursday, June 05, 2008

யாரை, எப்போது புகழலாம்! (தமிழமுது-2)



ஒருத்தரைப் புகழ்வதற்குக் கூட நேரம், காலம் இருக்கிறதா என்ன? கட்டாயம் இருக்கிறது என்கிறார் ஔவையார்.




நேசனைக் காணாவிடத்தில் நெஞ்சாரவே துதித்தல்
ஆசானை எவ்விடத்தும்
அப்படியே வாச மனையாளைப் பஞ்சனையில்
மைந்தர் தம்மை நெஞ்சில்
வினையாளை வேலை முடிவில்! - ஔவையார்

விளக்கம்:- நண்பனைப் புகழ வேண்டுமானால் அவனைக் காணாதபோது மனமாரப் புகழ வேண்டுமாம்; ஆசிரியர் என்றால் அவரை நேரிலும், மறைவிலும் எப்போதும் துதிக்கலாம்;மனைவியைப் பஞ்சனையில் புகழ வேண்டுமாம்; பெற்ற பிள்ளைகளைப் புகழ்வது மனதுக்குள் தானாம்; வேலைக்காரர்களை, அவர்களது வேலைகளை முடித்த பிறகுதான் புகழவேண்டுமாம்.


நன்றி: தமிழோடு..

அமுது ஊறும்...

1 comment:

அகரம் அமுதா said...

பாடல்களுக்கு விளக்கம் வழங்கும் போது சிறுசிறு கதைகளையோ விளக்கங்களையோ வழங்கினால் நன்றாயிருக்கும் என நினைக்கிறேன். அருமை. வாழ்த்துக்கள்!

Blog Widget by LinkWithin